கிருஷ்ணகிரியில் நடந்த மாம்பழத்திருவிழாவில் பெங்களூரு கவிஞர்களின் கவியரங்கம் நடைபெற்றது.
அகில இந்திய பண்பாட்டுத்துறையும் தமிழ்நாடு அரசு பண்பாட்டுத்துறையும் இணைந்து கிருஷ்ணகிரியில் அண்மையில் மாம்பழத்திருவிழா நடத்தியது. 10 நாள்கள் நடந்த இந்ததிருவிழாவில் தினமும் நாட்டியம், பாட்டுக்கச்சேரி, சினிமாபாடல் நடனம், நாட்டுப்புறகலைநிகழ்ச்சி, நாடகம் போன்றவை இடம்பெற்றன. இதேபோல மாம்பழ சிறப்புகவியரங்கமும் நடந்தது. இக்கவியரங்கை பெங்களூருவை சேர்ந்த தமிழ் கவிஞர்கள் நடத்தினார். டாக்டர்.ஜெ.வி.ஜெயராஜ் தலைமையில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் இராம.இளங்கோவன், கா.உ.கிருஷ்ணமூர்த்தி, ஜெயா வெங்கட்ராமன், இரா.லாலாலஜபதி, கொ.சி.சேகர் ஆகியோர் கவிதை பாடினார்கள். கவிதைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று இராம.இளங்கோவன் தெரிவித்தார்.
0 comments :
கருத்துரையிடுக