தமிழ்க் கலை மற்றும் பண்பாட் கழகம் நடத்தியஇனிய இலக்கிய சந்திப்பு சிறப்பாக நவம்பர் 19ம் தேதி சிட்னியில் உள்ள துர்கை அம்மன் கோவிலுள்ள தமிழர்மண்டபத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் மக்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்பம்சமாக தமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது தமிழுரை வழங்கினார்.
அமைப்பின் தலைவர் முத்து இராமச்சந்திரன் வரவேற்புரை வழங்க செயலாளர் அனகன் பாபு அறிமுகவுரை ஆற்றினார். மாலை ஆறு மணியளவில் குத்துவிளக்கேற்றி விழா இனிதே துவங்கியது. உள்ளூர் கலைஞர்களின்நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழ்க்கடலின் நீண்ட நான்கு மணி நேர தமிழ் அலை வீச்சில் அசந்து பொய்அசையாமல் ஆடாமல் ஆனந்த சிரிப்போடு அரங்கம் அதிர மக்கள் ரசித்தனர்.
நீண்ட நேரத்தை பொருட்படுத்தாமல்சிட்னி வாழ் தமிழர்கள் ரசித்த முதல் தமிழுரை இதுவே ஆகும். அமைப்பின் பொருளாளர் கர்ணன் சிதம்பரபாரதிநன்றியுரை கூற இனிய இலக்கிய சந்திப்பு இனிதே நிறைவுற்றது. இதுபோல் தமிழ் இலக்கிய விருந்துவருடம்தோறும் படைக்கப்படும் என்று விழாவில் உறுதியளிக்கப்பட்டது.

0 comments :
கருத்துரையிடுக