
கருத்தரங்கத்திற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்று ஆய்வுக் கோவையினை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் ஆய்வுக் கோவையினைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேரா.முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முனைவர் பட்ட ஆய்வாளர் ஆசைக்கண்ணு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். செந்தமிழ் அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் சுரா கருத்தரங்க நோக்கவுரை ஆற்றினார். பேராசிரியர்கள் முனைவர் க.சிவனேசன், முனைவர் சு.நயினார், முனைவர் எழில்வேந்தன், முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் ஆ.சதீஸ், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
கருத்துரையிடுக