ads

இலக்கியம், அறிவியல், சமூக சேவை மாசிலா - விஜயா பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

 தமிழ் இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவை ஆகிய பிரிவுகளில் மாசிலா - விஜயா பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாசிலா - விஜயா பரிசை இந்தாண்டு முதல் ஆண்டுதோறும் தென்றல் குடும்பத்தினர் வழங்கவுள்ளனர். தமிழ் இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவை ஆகிய பிரிவுகளில் தலா ரூ. 50 ஆயிரம் இந்த பரிசில் வழங்கப்படவுள்ளது.

 தமிழில் இலக்கிய படைப்புகளை உருவாக்கியவர்களுக்கு தமிழ் இலக்கிய பரிசும், அறிவியல் ஆய்வுக் கட்டுரை, கண்டுபிடிப்பு அல்லது கருவி செய்த விஞ்ஞானிகளுக்கு அறிவியல் தொழில்நுட்பப் பரிசும் வழங்கப்படும். அதேபோல, தமிழகம் மற்றும புதுவையில் சமூக சேவையில் ஈடுபடுவோருக்கு சமூக சேவைப் பரிசு வழங்கப்படும்.

 இந்த பரிசைப் பெற பெயர், முகவரி மற்றும் தகுதி பற்றிய விவரங்களை ஆதாரப்பூர்வமாக 3 பக்கங்களில் அனுப்பவேண்டும். மேலும் இலக்கிய பரிசுக்கு நூலின் 4 படிகளை அனுப்பவேண்டும். இவற்றை பதிவுத் தபால் மூலம் திருஞானசம்பந்தன்: தென்றல், 100, அன்னை தெரசா நகர், மடிப்பாக்கம், சென்னை 600091 என்ற முகவரிக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0091 900 321 5381 என்ற எண்ணிலோ, என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
 பரிசுகள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திருச்சியருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். இந்த தகவல்களை தென்றல் குடும்பத்தின் வி. மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.