காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும அயல் மொழிகள் துறையின் சார்பில் ஒப்பீட்டு இலக்கியம் குறித்த தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துவக்க விழாவில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் சோம. கலியமூர்த்தி தலைமைவகித்துப்பேசினார். ஆங்கிலம் மற்றும் அயல் மொழி கள் துறைத் தலைவர் சொ. சுப்பையா கருத்தரங்க அறிமுக உரையாற்றினார்.
சென்னை மாநில ஆங்கில நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே. செல்லப்பன் கருத் தரங்கை துவக்கிவைத்துப் பேசுகையில்,ஒப்பீட்டு இலக்கியம் ஆய்வாளர்களுக்கு ஏற்ற சரியான களம். அது ஒரு மானுடம் ஒரு இலக்கியம் என்கிற பரந்த கோட்பாடுடையது. மேலும் குறுகிய சுவர்கள் கொண்ட இலக்கியங்களைக் கடந்து செல்கிறது என்று குறிப் பிட்டார்.
மைசூர் பல்கலை. பேராசிரியர் ஜே.கே. மீரா ராவ், பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. மார்க்ஸ், பேராசிரியர்கள் எஸ். கனகராஜ், கே. சேகர், எழுத்தாளர் எஸ். ரமேஷ், விரிவுரையாளர்கள் சுரேகா, விஜயசுந்தரி ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.
மாலையில் நடைபெற்ற நிறைவுவிழாவில், பல்கலைக்கழக பதிவாளர் வெ. மாணிக்க வாசகம் தலைமைவகித்தார். துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ் நிறைவுரையாற்றினார்.
முன்னதாக துவக்க விழாவில், பேராசிரியர் நாராயணமூர்த்தி வரவேற்றார். முடிவில் வருகைப் பேராசிரியர் எல். திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
0 comments :
கருத்துரையிடுக