திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் பன்னாட்டு தமிழிசை நாட்டிய ஆய்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாள் நிகழ்ச்சி இன்று ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. முன்னதாக நேற்று திருவாவடுதுறை ஆதீனமடம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூர் இளைய சன்னிதானம் மருதாசலஅடிகள் தலைமை வகித்து, தமிழிசை ஆய்வு மாலை எனும் நூலின் முதல்படியை வெளியிட்டார். அதை குழந்தைகள் நல மருத்துவர் அவ்வை.மெய்கண்டார் பெற்றுக்கொண்டார்.
மருதாசல அடிகளார் பேசுகையில், சங்கத் தமிழ் இலக்கியங்களில் நாட்டியக்குறிப்புகள் உள்ளன. நாடகத்தின் திரைச்சீலை அமைக்கும் முறையைக் கூட சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது. ஆகவே தமிழக நாடகக்கலையைப் பின்பற்றியே மேலைநாட்டு நாடகக் கலை வளர்ந்துள்ளது என்றார். முன்னதாக சிறந்த நாட்டியக்கலை ஆசிரியர்கள் விருதை பாலாந்தகுமார் மற்றும் சாந்தினிஅருணகிரி ஆகியோருக்கு அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுரேஷ்சிவன் வரவேற்றார். மடப்புரம் ஓதுவார் ஆறுமுகம் மற்றும் பா.இளங்கோவன், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தியாகராஜன் நன்றி கூறினார்.
கருத்தரங்கின் இரண்டாவது நாள் நிகழ்ச்சி இன்று ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.

0 comments :
கருத்துரையிடுக