ads

"தமிழ் மரபு இசை கலைப் பண்பாட்டுக் கழகம்" தொடக்க விழா

"தமிழ் மரபு இசை கலைப் பண்பாட்டுக் கழகம்"  தொடக்க விழா நேற்று சனிக்கிழமை அன்று சென்னையில் நடந்தது. 
கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக அவ்வை சண்முகம் நாடக மன்றத்தில் நடிகனாக பங்கேற்று பயின்ற நேரங்களிலெல்லாம், இந்த நாடக உரையாடல்களெல்லாம் புத்தகவடிவில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியதுண்டு. தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கும் தனித்தமிழ் ஆர்வலர்களுக்கும் என்னைப் போன்ற தமிழ் நாடகவிரும்பிகளுக்கும் இயல்பாக உள்ளத்தில் எழும் இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்த நூல் பதிப்பு..

நானே நாடகம் தயாரிக்க வாய்ப்பு கிடைத்ததும், நாம் தயாரிக்கும் நாடகத்தினை நாமே என் நூலாக வெளியிடக் கூடாது என எண்ணினேன். தொடர்வண்டித் துறையில் நான் பணியாற்றியபோது எனக்கு பணியில் மூத்தவரும், நாடகத் துறையில் எனக்கு மூத்தவரும், நான் இணைந்திருக்கும் T K S நாடக மன்றத்தின் சில நாடகங்களை இயக்கியவருமான அண்ணன் திரு வேலுச்சாமி அவர்களிடம் கூறிய போது, என்னுடைய ஆர்வத்தைப் பாராட்டி, அவரே இந்த நாடக உரையாடல்களை முதல் நூலின் அமைப்பும், சுவையும் மாறாது மிகச் சிறப்பாக மேடை நாடக வடிவில் ஆக்கித் தந்தார். நூல் தயாரிப்பில் முழுவதுமாக துணை நின்றதுடன் ஒளி அச்சு செய்தது முதல் பிழைதிருத்தி அச்சிட்டு முழுமையாக உதவிய தமிழ் மரபு இசை கலை பண்பாட்டுக் கழக தலைவர் திரு ப. இறைஎழிலன் அவர்களின் உதவி மகத்தானது.

என்னுடைய முதல் நாடகத் தயாரிப்பின்போது மிகவும் ஊக்கமூட்டிய அண்ணன் திரு. ராதாரவி அவர்களுக்கும், நண்பர் திரு. KR.செல்வராஜ் அவர்களுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மிகவும் பாராட்டி ஊக்கமூட்டிவரும் திரு. KP. அறிவானந்தம் அவர்களுக்கும், திரு (APN) SR. தசரதன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய முதல் குருவான திரு TKS புகழேந்தி அவர்களையும், தொடக்கத்தில் என்னுடன் கூட நடிக்கும்போது என்னை மிகவும் ஊக்கமூட்டிய நண்பர் திரு MNK நடேசன் அவர்களையும் நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறேன்.

நான் முதன்முதலில் நாடகமேடையில் அதுவும் புகழ்பெற்ற அவ்வை சண்முகம் நாடக குழுவில் சேர்ந்து நடிக்க காரணமாயிருந்த அண்ணன் திரு. செயக்கோபி அவர்களுக்கும், பிறகு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க ஊக்கமூட்டிய திரு M. லோகநாதன் அவர்களுக்கும், திரைத்துறையில் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கரை எடுத்துக்கொண்ட திரு R செல்வகுமார் அவர்களுக்கும், தன்னுடைய நாடகக்குழுவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பளித்துவரும் திரு D. பாலசுந்தரம் அவர்களுக்கும், என்னுடைய நன்றி.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பளித்து ஊக்கமூட்டிய திரைப்பட இயக்குனர்கள் திரு தங்கர் பச்சான், திரு TP கஜேந்திரன், C. ரெங்கனாதன் A ராஜகோபால், KM ராஜாங்கம்முதலான அனைத்து இயக்குனர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் தமிழக மக்களுக்கு உணரச் செய்து, தொன்றுதொட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்து, இராசராசன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிற, மறைக்கப்பட்டு வருகிற தமிழரின் மரபு கலைகளை புத்துயிரூட்டி வளர்க்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்படுகிற "தமிழ்மரபு இசை கலை பண்பாட்டுக் கழகம்" தொடக்க விழாவில் என்னுடய நூலினை வெளியிட ஒப்புதலளிதத நிர்வாகிகளுக்கும், நெறியாளர்களுக்கும் என் நன்றி.

மேலும் என் வாழ்வில் என் வளர்ச்சியில் துணை நின்ற இன்ன பிறருக்கும் என் நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக எனையீன்ற தாய் தந்தையரை வணங்கி மகிழ்கிறேன்.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான சிறு படையலாக தந்து, இனி வரும் காலங்களில், இது போன்ற பல சரித்திர நாடகங்களை மேடையேற்றுவதுடன் பதிப்பிக்கவும் விரும்பும் எனக்கு தமிழ் ஆர்வலர்களும் தமிழ்த் தாயும் துணையிருப்பார்கள் என்று நம்புகிறேன்
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.