வந்தவாசி,
அகநி வெளியீட்டகம் சார்பில், கவிஞர் கடல் நாகராஜன் தொகுத்த அதிசய மலர்கள்-1000 என்ற நூல் வெளியீட்டு விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகநி வெளியீட்டக பதிப்பாளர் மு.முருகேஷ் தலைமை வகிóத்தார். ஆர்.சுபத்ரா வரவேற்றார். நூலினை இரா.சிவக்குமார் வெளியிட நல்வழிகாட்டி அமைப்பின் இயக்குனர் அருண்பாலாஜி பெற்றுக் கொண்டார். மேலும் நூல் குறித்து அருண்பாலாஜி பேசினார். கவிஞர் கடல் நாகராஜன் ஏற்புரை வழங்கினார். ஞா.பன்னீர்செலவம், வெ.அரிகிருஷ்ணன், ஆர்.கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments :
கருத்துரையிடுக