தென் திசை எழுத்தாளர் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவிற்கு குறளகம் நிறுவனர் கவிஞர் தமிழ்க்குழவி தலைமை வகித்தார். கவிஞர் எஸ்.எம். செபாஸ்டின் எழுதிய அடித்தட்டு மக்கள் உயர என்ற கவிதை நூலை களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் விஎம்ஏ சுரேந்திரா வெளியிட நாகர்கோவில் யூனியன் வங்கி மேலாளர் மேரி ஜெனிட்டா பெற்றுக் கொண்டார்.
தென்திசை இயக்கத்தின் இயக்குநர் அருட்பணி. ஆன்டணி கிளாரட், செயலாளர் குமரி ஆதிவன், மேரி ஜெனிட்டா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் புலவர்கள் கு. பச்சைமால், செல்லம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் மலர்வதி, பெர்லின், தமிழ்ச் செல்வன், ஜோசப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
கருத்துரையிடுக