புது தில்லி, மார்ச் 3: தில்லி தமிழ்ச் சங்கத்தில் வரும் வியாழக்கிழமை (மார்ச் 6) மாலை 6.30 மணிக்கு பார்வையற்றோர் இசைக் குழுவினர் வழங்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விடியல் பார்வையற்றோர் இசைக் குழுவினர் புதுமையான முறையில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் தில்லிவாசிகள் கலந்து கொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments :
கருத்துரையிடுக