6–வது ஆண்டு விருது வழங்கும் விழாவான இன்று பல்வேறு பிரிவுகளில் சிறந்த
படம், நடிகர்–நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது
வழங்கப்பட்டது. ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ என்ற படம் சிறந்த படமாக தேர்வு
பெற்றது. இந்த பிரிவில் போட்டியிட்ட 9 படங்களில் இருந்து தேர்வான இந்த
படத்தை கறுப்பர் இனத்தை சேர்ந்த ஸ்டீவ் மெக்யூன் என்பவர் இயக்கி இருந்தார்.
86 ஆண்டுகளில் கறுப்பர் இனத்தை சேர்ந்த இயக்குனர் ஒருவரின் படம் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு முன்னர் இருண்ட காலம் என்று வர்ணிக்கப்பட்ட காலத்தில் அடிமைகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாகும் இது. சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த உரையாடலுக்கான இரு விருதுகளும் இந்த படத்திற்குக் கிடைத்தது.
‘கிராவிட்டி’க்கு 7 விருதுகள்
விண்வெளி சாகசங்களை மையமாகக்கொண்ட ‘கிராவிட்டி’ என்ற ‘3 டி’ படத்திற்கு 7 விருதுகள் கிடைத்தன. மெக்சிகோ நாட்டைச்சேர்ந்த அல்போன்சோ காரோன் இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெறும் முதல் லத்தீன் அமெரிக்கர் இவர் ஆவார்.
ரூ.600 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு இருந்த இந்த படம், சிறந்த இயக்குனர் விருதுடன் படத்தொகுப்பு, ஒலித்தொகுப்பு, ஒலிக்கலவை, விஷுவல் எபக்ட், சினிமாட்டோகிராபி, சிறந்த இசை ஆகிய மேலும் 6 பிரிவுகளிலும் விருதுகளைத் தட்டிச்சென்றது.
சிறந்த நடிகர்–நடிகை
சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருது முறையே மேத்யூ மக்கனாகே (டல்லாஸ் பய்யர் கிளப்) மற்றும் ஆஸ்திரேலியாவின் கேட் பிளாஞ்செட் (புளூ ஜேஸ்மின்) ஆகியோருக்கு கிடைத்தது.
சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான விருது இத்தாலி மொழி படமான ‘தி கிரேட் பியூட்டி’க்கு கிடைத்தது.

0 comments :
கருத்துரையிடுக