விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் மூத்த எழுத்தாளர் சபாநாயகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் அவரது 80-ஆம் ஆண்டு விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது. இதில், கவிஞர் கரிகாலன் வரவேற்றார். முனைவர் தங்கத்துரை தலைமை ஏற்றார். கவிஞர் த.பழமலய் அறிமுகவுரையாற்றினார். எழுத்தாளர் வே.சபாநாயகம் ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர் பல்லவி குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழாவில், மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் எழுதிய புற்றில் உரையும் பாம்பு எனும் சிறுகதை தொகுப்பை அரி.கிருஷ்ணமுர்த்தி வெளியிட எழுத்தாளர் எஸ்ஸôர்சி பெற்றுக்கொண்டார். தடம் பதித்த சிற்றிதழ்கள் எனும் நுôலை பேராசிரியர் சு.சம்பந்தம் வெளியிட மருத்துவர் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். எனது இலக்கிய அனுபவங்கள் நுôலை நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் வெ.ராமநாதன் வெளியிட தீபம் திருமலை பெற்றுக்கொண்டார். சபாநாயகத்தின் 80-ஆவது ஆண்டு விழா மலரை எழுத்தாளர் குறிஞ்சி வேலன் வெளியிட இர.மெய்கண்டநாதன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்லடம் மாணிக்கம், கவிஞர் சக்தி, எழுத்தாளர் கண்மணி குணசேகரன், ஜீவகாருண்யன், பால்கி உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். ஆசிரியர் பு.ராசேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.

0 comments :
கருத்துரையிடுக