ads

விருதுநகர் மாவட்ட கலைமன்றம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலை மன்றம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கான விருது பெற தகுதியான கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
     இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திóக் குறிப்பு: தமிழகத்தில் கலைப்பண்புகளை மேம்படுத்தி பாதுகாக்கும் நோக்கத்திலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 பேருக்கு விருதுகள் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-2003ல் தொடங்கி, 2012 வரையில் இதுவரையில் 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    இம்மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தேர்வு செய்ய தேர்வாளர் குழு ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம்(வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
     இதில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி, 19 வயது 35 வயதுள்ளோருóககு கலைவளர்மணி, 36 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்டோருக்கு கலைசுடர்மணி, 51 வயது முதல் 60 வயதிற்குள்பட்டோருக்கு கலை நன்மணி மற்றும் 61 வயது மேற்பட்டோருக்கு கலைமுதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. 
     இந்த விருதுக்கு கலைப்புலமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு  தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொறிகிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கி கெüரவிக்கப்படுவார்கள். இம்மாவட்டத்தில் இருந்து தேசிய விருதுகள்(கலைமாமணி) மற்றும் ஏற்கனவே கலைமன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. எனவே தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருது பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயது, முகவரி மற்றும் கலை அனுபவம் ஆகிய சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
   மேலும், தொலைபேசி எண்:0462-2553890 என்ற எண்ணிலோ அல்லது உதவி இயக்குநர், மண்டலக் கலைபண்பாட்டு மையம், 8208 டிராக்டர் வீதி, அரசு அலுவலர் அ குடியிருப்பு வளாகம், திருநெல்வேலி-7 என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு தகவல்களை அறிóந்து கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.  
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.