காஞ்சி சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மரபு வழியான இலக்கண இலக்கியம் புலமைக்கான செறிவும் தெளிவும் நிறைந்த சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களை படிக்க ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் சங்கர வித்யாலயாவில் வகுப்புகள் நடைபெற உள்ளன. மகாவித்துவான் வே.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்துவர். ஞாயிறு மட்டும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த வகுப்புகளுக்கு அனுமதி இலவசம். மதிய உணவு வழங்கப்படும். இதில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. குறைந்தபட்சம் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த மாதம் 11–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
கருத்துரையிடுக