ads

காவிய கவிஞர் வாலியின் படத்திறப்பு மற்றும் கவிதாஞ்சலி

சென்னை,

சென்னை அம்பத்தூரில் தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிறு காலை காவிய கவிஞர் வாலியின் படத்திறப்பு மற்றும் கவிதாஞ்சலி நிகழ்ச்சி  நடந்தது.  15 ஆயிரம் திரை இசை பாடல்கள் எழுதி மக்கள் மனதில்  நீங்கா இடம் பிடித்த வாலிப கவிஞர் வாலி அவர்களின் படத்திறப்பு மற்றும் கவிதாஞ்சலி நிக்ழச்சிக்கு சங்கத்தின் தலைவர் ஆரணி அரவாழி தலைமை தாங்கினார். கவிஞர் காசிநாதன் வரவேற்புரை ஆற்றினார். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மகன் கவிஞர் கண்மணி சுப்பு அவர்கள் கவிஞர் வாலி அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்து வாலியின் பெருமைகளையும் பாடல் புதுமைகளையும் எடுத்துக்கூறி புகழ் அஞ்சலி செலுத்தினார். 

கவிஞர் கண்மணி சுப்பு அவர்கள் பேசும் போது கவிஞர் வாலியோடு பணியாற்றிய திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு அவரின் இயல்பான எளிமையான குணங்களையும் கூறி நெகிழ்ந்தார். அதனை தொடர்ந்து சங்க நிறுவனர் க.ச. கலையரசன் இடையூர் நாகராஜன், ஆகியோர் முன்னிலை வகிக்க கவிஞர் கவிராசன் தலைமையில் கவிஞர் வாலிக்கு கவிதாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிசுடர் சிந்தை வாசன், விழுதுகள் ஐயாபிள்ளை, கவிஞர் திருமலைசோமு மா.குமர வேல், செ.கு. அன்பரசன், ஆறுமுகம், இரா. அன்பரசன், திருமுருகு. இளந்துவனர், ஆ.மு. மனோகனர், வாசுதேவன், இரா தனுகோடி,தென்றல் சசிகலா, எஸ்.எம். கவுசகி, கவிஞர், ரவிச்சந்திரன், ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர். நிறைவாக கவிஞர் சே.மு. தமிழ்பிரியன். நன்றியுரையாற்றினார்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.