பீஜிங் : சீன வானொலி தொகுத்துள்ள "சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகளின்" வெளியீட்டு விழா ஜுன் 6ம் தேதி பீஜிங்கில் நடைபெற்றது. தமிழ், இந்தி, உருது, நேபாளம் உள்பட 18 மொழி கலைச்சொல் அகராதிகள் வெற்றிகரமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
வீட்டு வசதி, பொழுதுபோக்கு, பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சமூக காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு விழாவில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள், செய்தியாளர்களுக்கு சீன-தமிழ் அகராதியைக் காண்பித்தார். கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியாகும். முன்பு, கலைமகள் எழுதிய "சீனாவில் இன்ப உலா" எனும் புத்தகம் தமிழகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :
கருத்துரையிடுக