சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுவுடன் இணணந்து நடத்திய மலேசியப் படைப்பாளர் ப.சந்திரகாந்தனின் “அழகு தெய்வம் மெல்ல மெல்ல என்ற நூல் வெளியீட்டு விழா சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாக அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு நாகை தங்கராசு தலைமை வகித்தார். கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை வழங்கினர். நூலையும் “மலேசிய இந்தியர் இருநூறாண்டு கால வரலாறு“ என்ற ஆவணப் படத்தையும் நாகை தங்கராசு வெளியிட, அபிராமி பழனியப்பன், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், தொழிலதிபர் ஜோதி மாணிக்கவாசகம், தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா நாயுடு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். படைப்பாளர் ப.சந்திரகாந்தன் ஏற்புரையாற்றினார். முன்னதாக கழகத் துணைத் தலைவர் துரை மாணிக்கம் வரவேற்றார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் உள்ளிட்ட திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். துணணச் செயலாளர் ராம.வைரவன் நன்றி கூறினார், நிகழ்வுகளை வெங்கட் தொகுத்து வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
0 comments :
கருத்துரையிடுக