மும்பை,
தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் 32–ம் அமர்வு கூட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) சயானில் உள்ள அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கு காந்தி நினைவு கல்வி சங்கத்தின் செயலர் எஸ்.செல்லத்துரை தலைமை தாங்குகிறார். ஸ்ரீவைகுண்டம் பத்மநாப மங்களம் குமரகுரு கலைக்கல்லூரி, காந்தியக்கல்வி மையத்தின் இயக்குனர் சே.போஸ் ‘இன்றைய சூழலுக்கு காந்தியகத்தின் அவசியம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். முனைவர் ம.வி.வைத்திலிங்கம் மற்றும் முனைவர் டி.எம்.பீம்ராவ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கராத்தே முருகன் வரவேற்று பேசுகிறார். சிறப்பு விருந்தினர்களாக செ.அப்பாத்துரை, தி.ஜவகர், எஸ்.பழனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் திரளாக அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் அமைப்பாளர் ராஜாவாய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
கருத்துரையிடுக