ads

கன்னியாகுமரி–சென்னை 26¾ மணி நேரத்தில் சைக்கிளில் வந்து மாணவர் சாதனை

சென்னை

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது18). பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். விக்னேஷ் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நிற்காமல் சைக்கிள் ஓட்டி சாதனை புரிவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சைக்கிள் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், சென்னை உலக தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்தன.

விக்னேஷ் நேற்று பிற்பகல் 3.25 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். அவர் 24 மணி நேரத்திற்குள் சென்னை வந்தடைய திட்டமிட்டிருந்தார். ஆனால் மழை, காற்று காரணமாக விக்னேஷ் 26¾ மணி நேரம் பயணம் செய்து நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை அம்பத்தூர், ஆபீசர்ஸ் காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார். அவர் பயணம் செய்த மொத்த தூரம் 720 கிலோ மீட்டர்.

மாணவர் விக்னேஷை டி.ஐ. சைக்கிள் மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் சுஷாந்த் ஜெனா, தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிறுவனர் எஸ்.சண்முகம், பொதுச் செயலாளர் ஏ.துரை, அம்பத்தூர் நகராட்சி அ.தி.மு.க. செயலாளர் வி.அலெக்ஸாண்டர் உள்பட பலர் பாராட்டினர்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.