சென்னை: தமிழகத்தில், மின் உற்பத்தி குறைந்ததை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், டிச., 2ம் தேதி முதல், மீண்டும் இரண்டு மணி நேரம், மின் தடையை அமல்படுத்த, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. மற்ற மாவட்டங்களில், வீடுகளுக்கு, வந்து, போகும் "விருந்தாளி' போல், மின்சாரம் எப்போது வரும், போகும் என்பதே தெரியாது.
தமிழகத்தில், தினசரி மின்சார தேவை, 12 ஆயிரம் மெகா வாட். அதேசமயம், உற்பத்தி, சராசரியாக, 8,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. தேவையை விட, மின் உற்பத்தி குறைவாக உள்ளதால், பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு, 20 சதவீதமும் மின் வெட்டு
அமல்படுத்தப்பட்டது. குடியிருப்புகளுக்கு, காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சுழற்சி முறையில், சென்னையில், மூன்று மணி நேரமும், மற்ற மாவட்டங்களில், 8 10 மணி நேரமும் மின் தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, சென்னையில், இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளில், நான்கு மணி நேரமும் மின் தடை செய்யப்பட்டது. காற்றாலைகள் மூலம், 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால், "இரண்டு மணி நேரம் மின் தடை' என, அரசு அறிவித்திருந்தாலும், கடந்த, மே மாதம் முதல், குடியிருப்புகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த வல்லூர், வடசென்னை மற்றும் மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையங்களில் இருந்து, கூடுதல் மின்சாரம்
கிடைத்ததை அடுத்து, தொழிற்சாலைகளுக்கான மின் வெட்டு, 40 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், அரசு அறிவித்தது. அதேசமயம், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில், மின் தடை செய்வதற்காக வெளியிட்ட அறிவிப்பை மட்டும், அரசு திரும்ப பெறாமல் இருந்தது. தற்போது, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு; தமிழக மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மற்றும் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு; மத்திய மின் ஒதுக்கீடு குறைவு போன்ற காரணங்களால், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில், சுழற்சி முறையில், நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வரும், 2ம் தேதி முதல், மீண்டும், சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின் தடை செய்ய போவதாக, மின்சார வாரியம் நேற்று அறிவித்தது. இதை பின்பற்றி, மற்ற மாவட்டங்களிலும், விரைவில், அறிவிக்கப்பட்ட மின் தடை அமலாகும் என, தெரிகிறது.

0 comments :
கருத்துரையிடுக