சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் ‘இலக்கியத்தில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பா.விஜய் கலந்துகொண்டு 233 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியை அரங்க. மல்லிகா சிறப்புரையாற்றினார். கல்லூரி நிறுவனர் எஸ்.தேவராஜ், டெல்பின் தேவராஜ், செயலாளர் தேவ் ஆனந்த், ஸ்ரீதேவி தேவ் ஆனந்த், இயக்குனர் ஜானி கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கே.சி.எஸ்.காசி நாடார் கல்லூரி முதல்வர் எஸ்.திருமகன் தலைமை தாங்கி பேசினார். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறந்த 3 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டு ஆய்வாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
0 comments :
கருத்துரையிடுக