முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு ஆய்வரங்கள், தேசிய, சர்வதேச கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள், அறக்கட்டளை சொற்பொழிவுகள், சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியன நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1–ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக கடந்த 2 நாட்களாக ‘அயல்நாட்டு தமிழ் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் தேசிய, சர்வதேச கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருந்து 60–க்கும் மேற்பட்ட அறிஞர்கள் வந்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர்.
இந்த விழாவில், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் கு.சிதம்பரம் வரவேற்றார். நிறுவன இயக்குனர் கோ.விசயராகவன் தலைமை உரையாற்றினார். இலங்கை கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் செ.யோகராசா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத்தலைவர் சு.குமரன் ஆகியோர் பேசினர். சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ நிறைவுரையாற்றினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் து.ஜானகி நன்றி கூறினார்.
0 comments :
கருத்துரையிடுக