அரசு பல் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜி.கண்ணப்பன், தனது பெயரிலும், மனைவி பெயரிலும் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றவர்களுக்கு விருதும், நலிந்தவர்களுக்கு நிதியுதவியும் அளித்து 18 ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றி வருகிறார்.
இந்த அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில், சமீபத்தில் அரசு விருதுகளான திருவள்ளுவர் விருது பெற்ற சேயோன், பாரதி விருது பெற்ற ராமமூர்த்தி, முத்தமிழ்க்காவலர் விருது பெற்ற மலையமான், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற உமர், சென்னைபல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்ற தாண்டவன் ஆகியோர் ‘பெருமை பெற்ற நம் பெரியோர்’ என பாராட்டப்பட்டனர்.
இந்த விழாவின் தொடக்கத்தில் வாசுகி கண்ணப்பன் வரவேற்றார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் சச்சு தலைமை தாங்கினார். மறைமலை இலக்குவனார் பாராட்டுரை வழங்கினார். கவிஞர் சுபசந்திர சேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், நீதிபதி வள்ளிநாயகம், மூத்த வக்கீல் காந்தி, லேனா தமிழ்வாணன், சாரதாநம்பி ஆரூரன், ராமனுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments :
கருத்துரையிடுக