சென்னை:
"நாகர்கோவிலில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, சிலை
அமைக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழக அரசின்
செய்திக்குறிப்பு: எம்.ஜி.ஆர்., அரசு மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன
திரையரங்கை புதுப்பிக்க, முதல்வர் ஜெயலலிதா, 99 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்துள்ளார்.தமிழ்நாடு திரைப்பட பிரிவால், பதிவு செய்த முக்கிய
நிகழ்வுகளை உள்ளடக்கிய, கருப்பு வெள்ளை பழைய செய்தி சுருள்களை, எவ்வித
பாதிப்பும் ஏற்படாமல், மின்னணு முறையில் பாதுகாக்க, 75 லட்ச ரூபாயும்,
நேரடி ஒளிபரப்பு கருவி, 18 லட்சம் ரூபாய் செலவில் வாங்கவும், முடிவு
செய்யப்பட்டிருக்கிறது. காமராசர் நினைவு இல்லத்தை புதுப்பிக்க, 25 லட்ச
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம்,
நாகர்கோவிலில், 11 லட்சம் ரூபாய் செலவில், கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளைக்கு சிலை அமைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
கருத்துரையிடுக