நாகர்கோவில்,
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் துணை இயக்குனர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நெல்லை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள ஓவிய கலைஞர்களின் முகாம் மற்றும் ஓவிய கண்காட்சி நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய கலை அரங்கத்தில் வருகிற 8–ந்தேதி காலை 10 மணியளவில் ஓவியர்கள் முகாம் நடைபெறுகிறது. இதில் ஓவியர்கள் தங்களது மரபு வழி மற்றும் நவீனபாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங் மற்றும் வாட்டர் கலர் ஓவிய படைப்புகளை முறையாக கண்காட்சி அமைக்கவும், சந்தை படுத்தவும் வாய்ப்பாக அமையும். இது ஓவிய கலையில் ஆர்வம் மிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்க உதவும். மேலும் இந்த முகாமில் அனுபவம் மிக்க முதிர்ந்த ஓவிய கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். ஆகவே குமரி மாவட்டத்தில் ஆர்வமுள்ள ஓவிய கலைஞர்கள் தங்களது ஓவிய படைப்புகளை கண்காட்சியாக அமைக்க நெல்லை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
கருத்துரையிடுக