எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 11 விருதுகளுடன் புதிதாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் பெயரில் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருதும் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழ்ப்பேராயம் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் அமைப்பின் மூலம் தமிழ்மொழி,இலக்கியம்,கலை,பண்பாடு,ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
இணையவழியிலான தமிழ்க்கல்வி,தமிழ் சமயக்கல்வி,கணினித் தமிழ்க்கல்வி ஆகிய துறைகளின் வழி பட்டயப்படிப்புகள்,சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருவதுடன்,அரிய பலநூல்களையும் பதிப்பித்து வருகின்றது.
மேலும் ஆண்டுதோறும் பல்வேறு தமிழ் அறிஞர் பெருமக்கள் பெயரில் 11 வகையான விருதுகளை தமிழ்ப் படைப்பாளிகள்,திறனாய்வாளர்கள்,சாதனை புரிந்த பேரறிஞர்களுக்கு வழங்கி, ரூ20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கௌரவித்து வருகின்றது.
மேலும் இந்த ஆண்டு முதல் சிறந்த நூல்களை வெளியிடும் பதிப்பகங்களையும் கௌரவித்து பாராட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்படும் 8 நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் விருதுடன் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
எனவே, தமிழ்ப்பேராயம் வழங்கவிருக்கும் விருதுகளுக்கான பரிந்துரைகளும்,நூல்களும் வரும் 30-6-2016 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
துறைத் தலைவர்,
தமிழ்ப்பேராயம்,
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்,
காட்டாங்கொளத்தூர்-603203.
தொலைபேசி-044 27417375
0 comments :
கருத்துரையிடுக