சீர்காழி:மார்3, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு காரணம் தமிழர்கள் அல்ல,தமிழ் மொழியின் வல்லமைதான் என்று தினமணியின் கட்டுரை ஆசிரியர் புலவர் உதயை மு.வீரையன் சீர்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை சார்பில் 22-ம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.விழாவிற்கு அதன் தலைவர் கோ.வெங்கடேசன் தலைமை வகித்தார்.பொருளாளர் முரு.முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் தினமணியின் கட்டுரை ஆசிரியர் புலவர் உதயை மு.வீரையன் பங்கேற்று மேலும் பேசியது, தனது வாழ்வினை மக்களுக்காக அர்பணித்து வாழ்ந்த திருவள்ளுவரை போற்றும் வகையில் இங்கு திருவள்ளுவர் நாள் கொண்டாடபடுகிறது.
சீர்காழிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.உலக நூலகத்தந்தை அரங்கநாதன் வாழ்ந்த ஊர்.தமிழிசை மூவர்கள் பிறந்து உலகெங்கும் தமிழிசையை பரப்பி சீர்காழிக்கு பெருமை சேர்த்தனர்.திருவாரூரில் பிறந்த தெலுங்கு இசை வாணர்களின் பெருமை பரவிய அளவிற்கு,தமிழிசை மூவர்களின் பெருமையை தமிழர்கள் போற்றி பரப்பவில்லை.உலகத்தில் சிறந்த மொழியாக கூறப்படும் கிரேக்கம்,லத்தீன்,கிபுரு,வடமொழிகள் உள்ளிட்டவைகளில் தற்போது வழக்கில் சீன மொழியும்,தமிழ் மொழி மட்டுமே உள்ளது.சீன மொழியின் வளர்ச்சிக்கு சீனர்கள் தான் காரணம்.ஆனால் தமிழ் மொழி சிறப்பாக உள்ளதற்க்கு காரணம் தமிழர்கள் அல்ல,
தமிழ் மொழியின் வல்லமை ஒன்றே காரணம்.அரசு பள்ளிகளில் மட்டுமே இருந்த தமிழ் தற்போது ஆங்கும் இல்லை.பள்ளிகள்,கோயில்கள்,ஆட்சியரகம்,இசை அரங்கு எங்கும் தமிழ் இல்லை.எல்லா இடஙகளிலும் தமிழ்மொழி புறக்கணிக்கபட்டாலும் இன்றும் தமிழ் மொழி நிலைத்து நிற்பதற்க்கு காரணம் அதன் வல்லமையே என்றார்.முன்னதாக பேசிய திருக்குறள் பண்பாட்டு பேரவையின் தலைவர் வெங்கடேசன் கடந்த 22 ஆண்டுகளாக இப்பேரவையின் வாயிலாக குழந்தைகளுக்கு திருக்குறளின் நெறிப்படி பண்பாடு,ஒழுக்கம் கற்றத்தரப்படுகிறது என்றார்.
விழாவில் பேரவை பொறுப்பாளர்கள் வே.சக்கரபாணி,சிவ.அன்பழகன் மற்றும் முன்னாள் சீர்காழி வர்த்தக சங்க தலைவர் இமயவரம்பன், மோ.மோகன்தாஸ்அ றிவானந்தம், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.தொடர்ந்து மாணவிகள் திருக்குறளுக்கு மல்லாரி ராகத்தில் பரதநாட்டியம் ஆடினர்.தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. பேரவை செயலாளர் கு.ராசாராமன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினார்.
0 comments :
கருத்துரையிடுக