ads

கறம்பக்குடியில் கவிதைப் பயிலரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கறம்பக்குடி கிளை சார்பில் ஒருநாள் கவிதைப் பயிலரங்கம் கறம்பக்குடி ரீனா மெர்சி மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பயிலரங்கிற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ஷெல்லிமனோகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளா  ரமா ராமநாதன் தொடக்கவுரையாற்றினார். ஆதலினால் கவிதை செய்வீர் என்ற தலைப்பில் கவிஞர் ஜீவி, ஹைக்கூக்களோடு ஒரு கைகுலுக்கல் என்ற தலைப்பில் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து கவிஞர் நா.முத்துநிலவன் தலைமையில் கவிதைக்கு மிகவும் அவசியமானது கற்பனையா வடிவமா கருத்தா  என்ற    தலைப்புகளில் நடைபெற்ற விவாத அரங்கில்  கவிஞர்கள் ராசி.பன்னீர்செல்வன், பேராசிரியர் சு. மாதவன், ஞாசே, அண்டனூர்சுரா, சந்திரசூர்யா ஆகியோர் பேசினர்.இதையடுத்து கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற சுழலும் கவியரங்கில் கவிஞர்கள் சு.மதியழகன், ஸ்டாலின்சரவணன், சுவாதி, கவிபாலா, சிவா ஆகியோர் கவிதை வாசித்தனர். கவிஞர்கள் அரிபாஸ்கர், கீதா, மணிவண்ணன், ராகசூர்யா ஆகியோர் கவிச்சரம் வாசித்தனர். விழிப்புணர்வுப் பாடல்களை ரெ.வெüóளைச்சாமி, த.அன்பழகன், அந்தோணிசாமி ஆகியோர் பாடினர்.கவிஞர்கள் எஸ்.இளங்கோ, சுரேஷ்மான்யா, தமிழ் உத்தம்சிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிலரங்கையொட்டி நடைபெற்ற கவிதைக் கண்காட்சியை சுபபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் திறந்து வைத்தார். கண்காட்சியில் கவிதைகளுக்கான ஓவியங்களை வரைந்த மாற்றுத் திறனாளியான கல்லூரி மாணவி வினோதா கெüரவிக்கப்பட்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி, பள்ளி தாளாளர் மார்க், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமுக்கண்ணு ஆகியோர்கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

முன்னதாக, நிர்வாகிகள் வீரையன், கென்னடி, சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ஸ்டாலின் சரவணன் வரவேற்றார்.  கிளை நிர்வாகி காசிராஜா நன்றி கூறினார்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.