ராஜபாளையம் திருவள்ளுவர் மன்ற 49 வது ஆண்டு திருவள்ளுவர் விழா ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்வைக்கோ வுக்கு செந்தமிழ் அறங்காவலர் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது,திருக்குறள் என்பது ஒரு விளக்கு இதை நல்வழியில் பயன்படுத்தி நாம் எந்த திசையிலும் செல்லமுடியும்.சட்டம் அறம் என நாம் எந்த திசையில் சென்றாலும் நம் வாழ்வுக்கு தகுந்த நல்லபலன் இதில் கிடைக்கும். ஒரு மரத்தில் உள்ள எல்லா கனிகளும் ஒரே சுவையில் இருக்காது. பல சுவைகளில் இருக்கும்.இதை உணராமல் இந்தக்கால இளைஞர்கள் சினிமா,விளையாட்டு வீரர்களை பின்பற்றி செல்கின்றனர்.தங்களுக்கும் சொந்தக்கால் ஒன்று இருப்பதை மறந்து இல்லாத ஒன்றைத்தேடி செல்கின்றனர்.இன்ஜினியரிங்,மருத்துவம் என பல்வேறு கல்விகள் இருந்தாலும் மனிதனை உருவாக்கும் கல்லி இருக்கவேண்டும் அப்போது தான் மனிதன் மேலும் மேலும் வளரமுடியும் என்றார்.
பின்னர் 10,12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுவழங்கி துணைவேந்தர் பொன்வைக்கோ மாணவ மாணவிகளை கெüரவித்தார்.உலகில் மூத்த முதல் மொழி தமிழே என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.மாலையில் நடந்த விழாவில் ராஜபாளையம் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி அருணாசலம் தலைமையில் திருக்குறள் அமுதம் என்ற தலைப்பில் நெல்லை கண்ணன் சிறப்புரையாற்றினார்.ராஜபாளையம் திருவள்ளுவர் மன்றத்தலைவர் முத்தரசு வரவேற்றார்.செயலாளர் அருணாசலம் நன்றிகூறினார்.விழாவில் தங்கமயில் நகைக்கடை செயல்அலுவலர் விஷ்வா நாராயணன் உட்பட திரளானவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராஜபாளையம் திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
0 comments :
கருத்துரையிடுக