சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டத்தை தமிழ் வளர்ச்சித்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், 2012–ம் ஆண்டில் (1.1.2012 முதல் 31.12.2012 வரை) வெளியிடப்பட்ட நூல்களுக்கு பரிசு வழங்கும் போட்டி 33 வகைப்பாடுகளின் கீழ் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்த நூலை பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்படும். போட்டிக்குரிய நூல்களின் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூலை மாதம் 31–ந் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பங்களை தமிழ்வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்ப கடைசி இந்த மாதம் 30–ந் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :
கருத்துரையிடுக