சென்னை
தமிழ்நாடு பொது நூலக துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களுக்கு
2010 மற்றும் 2011–ம் ஆண்டு பதிப்பு நூல்கள், நூலக நிதி மற்றும் ராஜா
ராம்மோகன் ராய் நூலக நிதியுதவியில் தமிழ், ஆங்கில நூல்கள் வாங்க பதிப்பாளர்
மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து மாதிரி படிகள் பரிசீலனைக்காக
வரவேற்கப்படுகின்றன
மாதிரி படிகள் சமர்ப்பிப்பதற்கான நூல்களுக்கான விண்ணப்ப படிவத்தை
(www.connemarapubliclibrarychennai.com) என்ற இணையத்தளத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களால் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும்
நூல்கள் தொடர்பான நிபந்தனைகள் நூல் பதிவு விண்ணப்பித்தல்
குறிப்பிடப்பட்டுள்ளன. உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
மற்றும் மாதிரி நூல்கள் அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழுவில் அடுத்த மாதம்
21–ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் 21–ந்தேதி வரை
பெறப்படும் நூல்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு
செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


0 comments :
கருத்துரையிடுக