ads

கரிசல் இலக்கியவாதி கழனியூரன் காலமானார்: நாளை நல்லடக்கம்

கரிசல் இலக்கியவாதி அப்துல்காதர் என்ற கழனியூரன் காலமானார். அவருக்கு வயது 61.நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்த எழுத்தாளர் கழனியூரன்  
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் கழுநீர்குளம் கிரா
மத்தை சேர்ந்தவர். இவர் 1954ஆம் ஆண்டு பிறந்தார்.  எஸ்.எம்.அப்துல்காதர் என்பது அவர் இயற்பெயர். இவர் சிறுகதை மற்றும் மண் மணம் மாறாத இலக்கியம் படைத்துள்ளார்.

பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் கி.ராஜநாராயணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக இன்று (27 தேதி ) காலமானார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொடர்பின் மூலம் நாட்டார் வழக்காற்றியல் துறையில் நாட்டம் கொண்டு நாட்டார் கதைகளைத் தேடித்தேடித் தொகுத்ததார். நெல்லை மாவட்டத்தின் வாய்வழிக்கதைகளைச் சேகரித்து அளித்திருப்பதே இவர் ஆற்றிய பணிகளில் சிறப்புவாய்ந்த ஒன்று. 

நெல்லை மாவட்ட கிராமியக் கதைகள், குறுஞ்சாமிகளின் கதைகள், தாத்தா பாட்டி சொன்ன கதைகள், செவக்காட்டு மக்கள் கதைகள், நெல்லை நாடோடிக் கதைகள் உள்ளிட்ட இவரது நாட்டார் கதைகளின் தொகுப்பு நூல்கள் முக்கியமானவை. 

கழனியூரன், சில காலம் உடல் நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி இன்று மரணம் அடைந்தார். அவர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.