ads

அந்தியில் ஒரு ரயில் வந்தது...

கண்கள் அழகானவை. கண்களால் நாம் பிறரை / பிறவற்றைப் பார்ப்பது ஓர் அழகு. நம்மை நாமே பார்ப்பது ஓர் அழகு. இங்கு பார்வை என்று சொல்வது பிம்பங்களின் மீது விழுகிற ஒன்றல்ல... அதற்குள் ஊடுருவிக் காண்கின்ற இன்னொன்று.
உலகப் புகழ் பெற்ற நேஷனல் ஜியாக்ரபிக் புகைப் படக் கலைஞர்களும் பிறரும் பதிவு செய்த வாழ்வின் அற்புதமான தருணங்களை... 'அழகின் வரைபடங்கள்' என்று சுந்தரபுத்தன் ஒரு தொகுப்பு நூலாக்கியிருக்கிறார். 
அந்தியின் ஒளியில் ஊடுருவிச் செல்லும் ரயில் போல ஏதோ ஓர் ஏக்கம்...எதை நோக்கியோ ஒரு பயணம்... இந்தப் பக்கங்களில் நம்மை இழுத்துச் செல்கின்றன...
சுந்தரபுத்தன் வேர்களை இழக்காத கிராமத்தின் பச்சை. சென்னை வரை நீண்டிருக்கும் அவரது கிளையில் பூக்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதே பெரும் சாதனை. அவரது தேடல்களில் இது ஒரு அழகான அனுபவம்...
- பழநிபாரதி
நூல் வாங்க: 73580 16453 / tamizhveli2.2@gmail.com
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.