ads

"உலகத் தொல்காப்பிய மன்றம்- சவூதி அரேபியா பிரிவு துவக்கம்

தமிழ்நாடு சமூக நல அமைப்பு தம்மாமின் ஒருங்கிணைப்புப் பணியில் "உலகத் தொல்காப்பிய மன்றம்- சவூதி அரேபியா பிரிவு" துவங்கப்பட்டது!
தம்மாம் தமிழ் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள விழா சிறப்புற நடைபெற்றது!
செல்வி ரஹீமா சத்தார் திருக்குர்ரான் கிராத் வாசித்தார்!
சவூதித் திருநாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது!
திரு.அப்துல் சத்தார் விழா தலைமையுரையில் அமைப்பின் சமூக பணிகள் குறித்து விளக்கினார்!
சமூகப் பணியாளர் திரு. வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்!
தமிழகத்திலிருந்து வருகை தந்த உலக தமிழ் இஸ்லாமிய கழகத்தின் செயலர் & அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழக
செயலர் திருமிகு. இதாயதுல்லா அவர்கள் மிக சிறந்த பண்பாட்டு உரையை நிகழ்த்தினார்!
இவ்விழவில் ...
உலக தொல்காப்பிய மன்றம்- சவூதி அரேபிய பிரிவு துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்!
தொல்காப்பியம் பனம்பாரனார் வழங்கிய பாயிரம் ஒலி வடிவம் இசைக்கப்பட்டது!
உலக தொல்காப்பிய மன்ற சவூதி அரேபியா பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் பாரதி சவூதி அரேபியா பிரிவு தம்மாம், ரியாத்,ஜெத்தா, அபஃஹா பொறுப்பாளர்களை அறிவித்தார்!
திரு. சபாநாயகம், திரு. சின்னையா டைற்றஸ், திரு. சுரேஷ் குமார், திரு.ஷெரீஃப், திரு. இராபர்ட் ஜெரோம், திரு. இளையவாணன், திரு. மகாராஜன, திரு. நடராஜன், திரு. ஹலீம், ஆகியோர் சவூதி பிரிவு நிறுவனர் குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டது!
தம்மாம் பிரிவின் செயற்குழு சிறப்பு உறுப்பினர்களாக திரு. சதீஷ், திரு. அமீன், திரு. ரமேஷ் பாலன், திரு. ஹைதர் அலி, திரு. இராமசாமி, திரு. பரூக் இராஜா, திரு. பிரான்சிஸ் ரீகன், திரு. ஜோஸ், திரு. செல்ல மணிகண்டன், திரு. ஜாகீர், திரு. இராம மூர்த்தி. திரு. ஸ்ரீனிவாசன், திரு. வர்கீஸ், திரு.ஹபீப், திரு.தென்னவன், திரு. ஹனீஃப், திரு. ஆனந்த், திரு. கோடீஸ்வரன், திரு. வினு ராஜேந்திரன், திரு. பபிஷ் பாபு, திரு. சேட் சத்தார், திரு. ஜட்ஜஸ் ஆரீஃப், தமிழ் சொல்வேந்தர் மன்ற தலைவர் திரு. சிவ சக்தி கணேஷ், மற்றும் திரு. ஜி.கே. மணி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்!
ரியாத் நகரின் தொல்காப்பிய பிரிவின் ஒருங்கிணைப்பாளராக சமூக பணியாளரும் சவூதி தமிழ் சங்க பொதுச் செயலாளருமான திரு. இம்தியாஸ் அஹமத் மற்றும் குழு உறுப்பினர்களாக பேராசிரியர் லேசர் விஞ்ஞானி மாசிலாமணி, திரு. சபாபதி, திரு. சஜாவுதீன், திரு. ஜவகர், சென்னை மழை துயர் மீட்பு களப்பணித் தொண்டர் திரு. ஜமால் சேட், மற்றம் திரு. சிக்கந்தர்.
ஜெத்தா நகர தொல்காப்பிய பிரிவின் ஒருங்கிணைப்பாளராக ஜெத்தா தமிழ் மன்ற தலைமை குழு உறுப்பினர் திரு. சிராஜூதீன் மற்றும் குழு உறுப்பினர்களாக திரு. மல்லப்பன், திரு.விஜயன், திரு. ராஃபியா, திரு. அன்பு மணி மற்றும் திரு.வேதா.
அபஃஹா நகர் தொல்காப்பிய மன்ற பிரிவு ஒருங்கிணைப்பாளராக அபஃஹா தமிழ்ச் சங்க தலைவர் திரு. முருகதாஸ் மற்றும் குழு உறுப்பினர்களாக திரு. இராஜூ மற்றும், திரு. டேவிட் கமலஹாசன்.
தமிழ் சமூக தலைவர்களுக்கு "தொல்காப்பியமும் தொல்காப்பியரும" அறிமுக நூல் வழங்கப்பட்டது!
நூல் பிரதிகளை தமிழ் சமூக இயக்க தலைவர்களுக்கு திருமிகு. இதாயதுல்லா அவர்கள் மேடையில் வழங்கினார்!
நூல்களை... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக சவூதி தலைவர் திரு. ஷஃபியுல்லா,
இந்தியன் பெட்டர்னிடி ஃபாரம் செயலர் திரு. ஃபைசல்,
இந்தியன் சோசியல் ஃபாரம் செயலர் திரு. அபுபக்கர்,
இஸ்லாமிய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் உறுப்பினர் திரு. பாஷா,
ஜமாத் இஸ்லாம் தமிழ் பிரிவு பொறுப்பாளர் திரு. சுல்தான்,
முத்தமிழ் மன்ற நிர்வாகி திரு.நாஞ்சில் கபீர்,
தம்மாம் தமிழ் அரங்க தலைவர் இராமநாதன்,
அல்கோபர் தமிழ் சொல்வந்தர் மன்ற தலைவர் திரு. இராமமூர்த்தி,
இந்திய பன்னாட்டுப்பள்ளி நிர்வாகக் குழு தமிழக பிரதிநிதி துணை தலைவர் முனைவர் விஞ்ஞானி பிரான்சிஸ் போர்ஜியோ,
கிங் பஹத் பல்கலைக் கழக பேராசிரியர் சலீம்,
ஜுபைல் ராயல் கமிஷன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பீர்முகமது,
தமிழாசிரியர்கள் திருமதி. அபர்னா குமரன், திருமதி. ஃபாத்திமா, திருமதி.ஃபரீதா,
சொல்வேந்தர் கவிஞர் ரமேஷ் பாலன்,
தான்ஸ்வா நிர்வாகிகள் திரு. பாபு, திரு. டைற்றஸ், திரு. இராஜேந்திரன், திரு.சரவணன், திரு. இரவி யாவரும் பெற்றுக் கொண்டனர்!
தமிழ் ஆசிரியர்களின் தலைமையில் தொல்காப்பியம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல்,!
தமிழ் வெண்பா பயிற்சி கவிஞர்களுக்கும் தமிழார்வர்களுக்கும் வழங்குதல் !
மாணவர்களின் தொல்காப்பிய பாடல் அரங்கேற்ற விழா!
என கண்ணான நோக்கங்களுடன் சவூதிப்பிரிவு உலக தொல்காப்பிய மன்ற வழிகாட்டுதலுடன் செயல்படும்!
தொல்காப்பியர் மற்றும் அதங்கோட்டாசான் அவர்களின் மூவாயிரம் வருட வரலாறு தமிழின் தமிழரின் கலாச்சார புகழ் மற்றும் பெருமை என விழாவில் நெறியாக்கப்பட்து!
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் மொழிதான்! அதை இளைய தலைமுறையினரிடம் தொடர்ந்து எடுத்துச் செல்லும் பணியை தமிழ் அமைப்புகள் செய்ய வேண்டும் என்று திரு. இதாயதல்லா கேட்டுக் கொண்டார்! உலக தொல்காப்பிய மன்றத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக திரு,இதயதுல்லா கூறி மகிழ்ந்தார்!
தொல்காப்பியருக்கு காப்பிக்காட்டில் காப்பிய பூங்கா மணி மண்டபம் அமைப்பதற்கும் அதங்கோட்டு ஆசான் நினைவு போற்றவும் தமிழ்நாடு சமூக நல அமைப்பு தொடரும் பணிகளைப் பாராட்டினார்!
இந்திய பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தொல்காப்பிய பயிற்றுவித்தல் பணியை தமிழாசிரியர் குழு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது!
பன்னாட்டு இந்தியப் பள்ளி தமிழாசிரியர்கள் திருமதி ஃபாத்திமா, திருமதி பிருந்தா தலைமையில் துணை முதல்வர் தனலட்சுமி இராமானுஜம், துணை முதல்வர் தஸ்னீம் முனீர், மனவள மருத்துவர் அபர்ணா திருக்குமரன், முனைவர் ஜூலியா, ஆசிரியை ஃபரீதா ஆகியோர் கொண்ட குழு தமிழ் மாணவருக்கான தொல்காப்பிய பயிலரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது!
உலக தொல்காப்பிய மன்றத்தின் செயர்குழுவின் வழிகாட்டுதலின் படி சவூதி அரேபிய கிளை தமிழ்த் தொண்டாற்றும்!
உலக தொல்காப்பிய மன்ற தலைவர் கவிஞர் கீ. பாரதி தாசன் (பிரான்சு) , துணைத்தலைவர் முனைவர் பால சுந்தரம் (கனடா), செயலாளர். பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் (பாண்டிச்சேரி), புரவலர் முனைவர் இளங்கோவன் (குவைத்) மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகளின் தொல்காப்பிய தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்து கூறப்பட்டது!
சவூதியிலுள்ள கவிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் கவிஞர் கீ. பாரதி தாசனாரின் வெண்பா மரபுக் கவிதை பயிர்ச்சி துவங்க முன்னெடுக்கப்படும்.
இஸ்லாமிய சமூக தலைவர்கள் உலக தொல்காப்பிய ம ன்றம்- சவூதி பிரிவில் தங்களையும் தமிழ்ப்பணிக்கு இணைத்துக் கொள்வதாக கூறினார்கள்!
விழா புரவலர்களான மதீனா குழும தலைவர் திரு. ஹலீம், சோழா வீடியோஸ் உரிமையாளர் திரு. சுபைர், அட்டஸ்ட் நிறுவன இயக்குநர் திரு. ஷெரீஃப், இந்திய சமூக பணியாளர் திரு. வெங்கடேஷ்,தொழில் முனைவர் திரு. பழனி, தம்மாம் தமிழ் அரங்கம் தலைவர் திரு. இராம நாதன், புரவலர் திரு. இராமனுஜம், எஸ். டி .கார்கோ நிறுவனர் திரு. அன்சாரி, கிங் ஃபகத் பல்கலைக் கழக பேராசிரியர் சலீம் யாவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது!
விழாவின் நிகழ்வை சொல்வேந்தர் குழும ஆளுநர் கவிஞர் ஹைதர் அலி அவர்கள் சிறப்புற தொகுத்து வழங்கினார்!
இந்திய சமூக பணியாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் அனைத்து பொறுப்பாளர்ளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது! 
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.