ads

துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி

துபாய் : நவம்பர் 11. 11.2016 வெள்ளிக்கிழமை அன்று குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின்  பரதநாட்டியம்  அரங்கேற்றம் டாக்டர் ராஜஸ்ரீ வாரியர் தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகு விமரிசையாக  நடைபெற்றது. 

குரு திருமதி மதுராமீனக்ஷி ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாட்டும், நட்டுவாங்கமும் திரு ஸ்ரீனி கண்ணூர் அவர்களின் மிருதங்கம் , திரு சுரேஷ் நம்பூதிரி அவர்களின் வயலின் , திரு பிரியேஷ் அவர்களின் புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக  இருந்தது . புஷ்பாஞ்சலி , அலாரிப்பில் ஆரம்பித்து கௌத்துவம்  , வர்ணம் , பதம் , கீர்த்தனம் , தில்லானா என ஷ்ரத்தா அசராமல் ஆடிய  அனைத்து  நடனங்களும் வெகு நளினமாக காண்போர் கண்களைக் கவர்ந்தன. அவர் ஆடிய ஆண்டாள் கௌத்துவம்மும் சின்னஞ்சிறு கிளியே பதமும் அவற்றில்  அவர் வெளிப்படுத்திய பாவமும்  அனைவரின் உள்ளங்களை கொள்ளை கொண்டன . விழாவின் ஏற்பாடுகளை ஷ்ரத்தாவின் பெற்றோர் திருமதி பிரேமா ஸ்ரீராம வும் திரு ஸ்ரீராம ஸ்ரீனிவாசனும் சிறப்பாக   செய்திருந்தனர் .

குமாரி ஷ்ரத்தா , குரு திருமதி மீனாட்சி ஸ்ரீனிவாஸ் நடத்திவரும் ஸ்வராலயா நடனப்பள்ளியில் கடந்த 7 வருடங்களாக பரதநாட்டியம் பயின்று வருகிறார். குமாரி ஷ்ரத்தா சிறு வயது முதலே பல மேடைகளில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சம்பவாமி யுகே யுகே , விவேக் 150 போன்ற நாட்டிய நாடகங்களிலும் பங்கேற்று இருக்கிறார். 

கடந்த வருடம் விபிஜியோர் நடத்திய நர்த்தன சாம்ராட் போட்டியில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றார்.  இவர் கர்நாடக சங்கீதத்தையும் முறையாக குரு மீனாட்சி ஸ்ரீனிவாஸ் அவர்களிடம் முறையாக பயின்று வருகிறார். மோகனா மேடைகளில் பல பஜனை பாடல்களும் , திருப்புகழ், அஷ்டபதி பாடல்களும்  சத்யா சாய் அமைப்பின் சார்பாக பல பஜனை பாடல்களும் பாடி இருக்கிறார். 

ஷ்ரத்தா கூடை பந்து விளையாட்டிலும் கை தேர்ந்தவர். ஆங்கில கவிதை எழுதுவதிலும் திறமை பெற்றவர். நீச்சல் , ஓவியம் இவரின் பொழுதுபோக்கு . இவர் பேச்சு போட்டியிலும் பல பரிசுகளை வாங்கி உள்ளார். 
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.