ads

தெலுங்கு டார்லிங் 'பிரபாஸ் பாகுபலி' ஆகிறது



பிரபாஸ், ராணா, சத்யராஜ் நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்து அகில இந்திய அளவில் சாதனையை ஏற்படுத்திய படம் “பாகுபலி”  இந்த படம். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் பிரபாஸ் உலகளவில் பிரபலமானார். இதையடுத்து பிரபாஸ் தெலுங்கில் நடித்து மெகா ஹிட் ஆனா “டார்லிங்” என்ற படத்தை “பிரபாஸ் பாகுபலி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிட உள்ளனர்.
செல்வந்தன், இது தாண்டா போலீஸ், புருஸ்லீ, மகதீரா, எவன்டா போன்ற  படங்களைத் தயாரித்த பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறது.  “பிரபாஸ் பாகுபலி” படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் முகேஷ் ரிஷி, துளசி, ஆகுதி பிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், எம்.எஸ்.நாராயணா, சந்திரபோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி ARK.ராஜராஜா கூறியதாவது: - இளம் காதல் கதையாக உருவாகி உள்ள இப்படத்தில்  – காஜல் அகர்வால் சிறு வயது முதல் ஒன்றாக படித்தவர்கள். தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க நினைகிறார்கள். அப்படி சந்திக்கிறவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் எப்படி காதலர்களாகிறார்கள் என்பதுதான் கதை.  வருஷம் 16 திரைப்படத்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது என்றார் ARK. ராஜராஜா. ஒளிப்பதிவு – ஆண்ட்ரூ, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்கள் –   திருமலை சோமு , மீனாட்சி சுந்தரம், சுவாதி, அருண் பாரதி, கதைவசனம் ஏ.ஆர்.கே ராஜராஜா.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.