ads

கவியரசு கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் அவரது 35ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

பி.ஹரிகரன் புகழ் கவிதை வாசித்தார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “வாழ்வும் வழியும்” என்ற தலைப்பில் பேசுகையில் எட்டாம் வகுப்புவரை மட்டும் படித்த கண்ணதாசன் தொடக்க காலத்தில் இதழியல், கவிதை, நாடகம் என பலதுறையில் கால் பதித்து கடுமையான முயற்சியில் திரைத் துறையில் நுழைந்து பல சதிகளை வென்று சாதித்தவர். அவரது பெரும்பாலான பாடல்கள் இன்றைய உலக மயமாக்கலில்கூட அனைவராலும் போற்றப்படுகிறது என்பதே  அவரது தனிச்சிறப்பு. 

இலக்கியம், பேச்சு, எழுத்து என அவரது படைப்பாற்றல் பல்துறையிலும் வழிகாட்டுகிறாது. அரசியல் பொது வாழ்வில் வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்தவர். தனது நிலைப்பாடுகள் மாறியபோது அதற்கான விளக்கங்களைக் கூறியவர். அவரது எளிய நடையும் ஆற்றலும், தன்னம்பிக்கையும் தமிழ் கூறும் நல் உலகில் தனித்தன்மையுள்ளது என்றார். 

கூட்டத்தில் கே.அண்ணாமலை, ரெ.கார்த்திகேயன், தியாகதீபம் அ.பாலு, வீ.காளீஸ்வரன், ஜெயப்பிரகாஷ், ஆர்.ரெங்கசாமி, வி.சுப்புராஜ், பி.பன்னீர்செல்வம், ஜெ.ரவிசங்கர், ச.ஆனந்தராஜ், ஏ.சி.பாபுலால், பி.பாலசுப்பிரமணியன், எஸ்.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். வ.முத்து நன்றி கூறினார்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.