ads

சங்க இலங்கியங்கள்

சங்க இலங்கியங்கள்
சங்க இலக்கிய நூல்கள் நமது தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துச்சொல்கின்றன கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள் ஆவார்கள் இப்புலவர்கள் இயற்றிய பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.


19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.


இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

        1.நற்றிணை
        2.குறுந்தொகை
        3.ஐங்குறுநூறு
        4.கலித்தொகை
        5.அகநானூறு

ஆகிய ஆறு நூல்களும்,

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

        1.பதிற்றுப்பத்து (Pathirruppattu)
        2.புறநானூறு (Purananooru)

ஆகிய மூன்றும்,

3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

        1.பரிபாடல் 


ஆகிய ஒன்றும் அடங்கும்.

எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர். இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். இவர்களுடைய பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மாண்பதை வாழ வழிகாட்டுவன பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து ஒழுகும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.